ஆப்நகரம்

நகை கடன் தள்ளுபடியில் நிபந்தனைகள்...முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தற்போதுள்ள திமுக ஆட்சியில் நகை கடன் தள்ளுபடியில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால், அதே அதிமுக ஆட்சியில் விவசாய பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்கடன்களை எந்தவித நிபந்தனையும் இன்றி, தள்ளுபடி செய்துள்ளோம் எனவும் பெருமையாக கூறினார்.

Samayam Tamil 22 Sep 2021, 3:17 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் நகைக்கடன்கள் தள்ளுபடி
  • நிபந்தனைகள் உள்ளதாக குற்றச்சாட்டு
  • முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்
கரூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் இருந்த தானேஷ் என்கின்ற முத்துக்குமார் கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதனால் அப்பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அப்பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை அடுத்து தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் அதே பதவிக்கு அதிமுக சார்பில் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனுவினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஷிடம் தாக்கல் செய்தார்.

இதன் பிறகு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தானேஷ் என்கின்ற முத்துக்குமார், பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

பிரெஞ்சு பெண் சொத்து பறித்த அதிமுக பிரமுகர்; வீடு புகுந்து சொகுசு கார் திருடும் வீடியோ வைரல்!

கடந்த 4 மாத திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை சேகரிப்போம். மேலும் திமுக வாக்குறுதிகளில் 52 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை.

வேட்பாளரை மிரட்டும் திமுக?; உள்ளாட்சித் தேர்தல் விறுவிறு!

அதிமுக ஆட்சியில் விவசாய பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்கடன்களை எந்த நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்துள்ளோம். இந்த திமுக ஆட்சியில் நகை கடன் தள்ளுபடியில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்துபவர்களுக்கு அந்த திட்டம் கிடையாது என்று தற்போதைய திமுக ஆளும் அரசு கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

பள்ளி மாணவிகளே உஷார்; ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளபாளையம் ராஜவாய்க்காலில் தூர் வாரப்படுகிறது என்பதெல்லாம் பொய்.

பள்ளி ஆசிரியர்கள் கவனிங்க; நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!

கடந்த ஆண்டு கூட அந்த வாய்க்கால் தூர் வாரப்பட்டது. நகரின் மைய பகுதியில் ஓடும் இரட்டை வாய்க்கால் கூவமாக மாறியதால் அவற்றை சுத்தம் செய்யும் விதமாக அதன் போக்கை மாற்றாமல் காங்கிரிட் சுவர் அமைத்து, அவற்றை மூடி, இரு பக்கங்களிலும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அடுத்த செய்தி