ஆப்நகரம்

அமைச்சரான செந்தில் பாலாஜி: அரசு கல்லூரியில் செம கொண்டாட்டம்!

செந்தில் பாலாஜி படித்த அரசு கலைக்கல்லூரியில் இனிப்புகள் வழங்கி விளையாட்டுத்துறை மாணவர்கள் கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Samayam Tamil 7 May 2021, 3:57 pm
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சராகக் கரூரைச் சேர்ந்த வி. செந்தில் பாலாஜி இன்று பதவி ஏற்றார்.
Samayam Tamil அமைச்சரான செந்தில் பாலாஜி: அரசு கல்லூரியில் செம கொண்டாட்டம்!


இதை தொடர்ந்து அவர் படித்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டுத்துறை மாணவர்கள் சார்பாக, இயக்குநர் உடற்கல்வித்துறை ராஜேந்திரன் தலைமையில், மாணவர்கள் ஏராளமானோர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

வெடி வைக்காமல், அரசு உத்தரவின்படி கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, அரசு கலைக்கல்லூரியின் வாசலில் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி... போக்குவரத்து அமைச்சர் டூ மின்சார துறை அமைச்சர்!

செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்றது குறிப்பிட்ட அரசு கலைக்கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி இயக்குநர் உடற்கல்வித்துறை ராஜேந்திரன் உள்ளிட்ட விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி