ஆப்நகரம்

கார்த்திகை தீபம்: கரூரில் விளக்கு செய்யும் பணி மும்முரம்!

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கரூரில் விளக்கு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Authored bySM Prabu | Samayam Tamil 1 Dec 2022, 7:10 pm
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள், மூலப்பொருள் விலை அதிகரிப்பால் விளக்கின் விலையும் உயர்ந்துள்ளது. பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil மண் விளக்கு உற்பத்தியாளர்
மண் விளக்கு உற்பத்தியாளர்


கரூர் மாநகரம் ஐந்து ரோடு அருகே கார்த்திகை தீபத்திற்கான விளக்கு, பொங்கல் பண்டிகைக்கான மண்பாண்டங்கள் செய்யும் பணியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. வருகின்ற 6 தேதி கார்த்திகை தீப நாளாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் இல்லங்களில் மண் விளக்குகளால், விளக்கு வைத்து தெய்வங்களை வணங்கி வருகின்றனர். இதற்காக, கார்த்திகை தீபத்திற்கு தேவையான விளக்கு தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. தயாரிக்கும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் வணிக வியாபாரிகள் நேரடியாக தேவைக்கேற்ப வாங்கி சென்று வருகின்றனர்.
உலக எய்ட்ஸ் தினம்: கரூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
இதுகுறித்து மண் விளக்கு உற்பத்தியாளர் கூறுகையில், “கார்த்திகை தீப நாளில் விளக்கு வைத்தால் உடலில் உள்ள நோய்கள் விலகும், வீடு சுபிக்‌ஷமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஐந்து தலைமுறையாக தொழில் செய்து வருவதாக தெரிவித்த அவர், “இந்தாண்டு விளக்கு செய்வதற்கான மூலப்பொருளான மண், மணல், மட்டை கிடைப்பது சிரமமாக உள்ளது. வெளியே வாங்கி செய்யும் நிலைதான் உள்ளது. உற்பத்தியானது கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு குறைவாகதான் உள்ளது. விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.” என்றார்.

குத்துவிளக்கு, ஐந்து முகவிளக்கு, லட்சுமி, விநாயகர், சரஸ்வதி விளக்கு மற்றும் சாதரண விளக்கு என பல வகையான மண் விளக்குகள் உள்ளது. ஒரு ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தொழில் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. அதற்கு ஏற்றார் போல பணி செய்து வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி