ஆப்நகரம்

அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

Authored bySM Prabu | Samayam Tamil 5 Dec 2022, 1:19 pm
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலை உச்சியில் 1017 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆகும்.
Samayam Tamil கரூர் அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில்
கரூர் அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில்


இந்த சிவஸ்தலத்தின் மலையின் மேல் காகங்கள் பறப்பது இல்லை. மேலும் அய்யர் மலை ஆனது மாணிக்க மலை, வாட் போக்கி மலை, ஐவர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிவஸ்தளத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று கார்த்திகை மாதம் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சோமவார விழா நடைபெற்றது. இதில் அய்யர்மலை கோவில் குடி பாட்டு காரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரரை தரிசித்து வழிபட்டனர்.
கருரில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கிய பாஜக!
மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவித்த நெல், கடலை உள்ளிட்ட பயிர்களை மலையின் வழிநெடுங்கிலும் தூவியும், நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் கோழி, மாடு கன்று குட்டிகளை கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

நான்காவது சோமவரம் நிகழ்வான அடுத்த திங்கட்கிழமை பக்தர் ஒருவர், உருண்டு கொண்டே மலை மீது ஏறி இறங்கி தரிசனம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி