ஆப்நகரம்

நள்ளிரவில் ஆண், பெண் தற்கொலை; தகாத உறவு காரணமா?

கரூர் தோகைமலை அருகே நள்ளிரவில் ஆண், பெண் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 16 Apr 2021, 4:25 pm

ஹைலைட்ஸ்:

  • மனைவி எச்சரித்ததால் விபரீத முடிவு
  • விஷம் குடித்தும் சாகாததால் தூக்கு
  • பரிதவிக்கும் குழந்தைகள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கரூரில் நள்ளிரவில் ஆண், பெண் தற்கொலை
கரூரில் இருவர் திடீர் தற்கொலை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ஆறுமுகம் (30). மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 27 வயதில் மனைவி உள்ளார். தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் சிவபாக்கியம் (28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் ஆறுமுகம், சிவபாக்கியத்துக்கு இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆறுமுகம் மனைவி தனது கணவரை கண்டித்தாகவும், இனிமேல் சிவபாக்கியத்துடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ஆறுமுகம், சிவபாக்கியம் இருவரும் நேற்று இரவு சந்தித்து பேசியுள்ளனர். பின்னர், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து அதற்காக வாங்கி வைத்திருந்த விஷத்தை உட்கொண்டனர். இதில் சிவபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆறுமுகம் விஷம் குடித்தும் உயிர் போகாததால் சிவபாக்கியத்தின் துப்பட்டாவை தனது வேட்டியுடன் இணைத்து அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தோகைமலை காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.

தகவலறிந்து அதிகாலை 3 மணி அளவில் தோகைமலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பேர் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தோகைமலை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி