ஆப்நகரம்

டவர் வைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்: நாமக்கல் கிராம மக்கள் முடிவு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிப்போமென பிளக்ஸ் பேனர், கருப்புக்கொடி கட்டியதால் பரபரப்பு.

Samayam Tamil 9 Mar 2021, 5:21 pm
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேடு பகுதியில் உள்ள வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் அருகே தனியார் நிலத்தில் செல்போன் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil cell phone tower


செல்போன் உயர் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார் செல்போன் உயர் கோபுரம் அமைக்ககூடாது அதனை அகற்ற வேண்டுமென பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 மற்றும் 5வது வார்டு பொதுமக்கள் வருவாய் துறையிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொத்தனூர் பகுதியில் தனியார் செல்போன் உயர் கோபுரத்தை அமைக்ககூடாது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் எனக்கூறி கருப்புக் கொடி கட்டியும், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: மரக்காணம் கடற்கரையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... கண்டுகொள்ளுமா அ

தனியார் செல்போன் கோபுரத்தை அமைப்பதை தடுத்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி