ஆப்நகரம்

கட்டுச்சோறுடன் அலையும் மக்கள்; கோட்டை விடும் மாவட்ட நிர்வாகம்!

கரூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் காட்டுகின்றனர். அதற்காக தினமும் கட்டுச்சோற்றுடன் அதிகாலை 4 மணி முதல் காத்துக்கிடந்து, அவதிப்பட வேண்டி உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2021, 3:16 pm

ஹைலைட்ஸ்:

  • மக்கள் கூட்டத்திற்கு ஏற்றார்போல் தடுப்பூசி
  • சுமார் 7 மணி நேரத்திற்கு பின்னர் தடுப்பூசி
  • மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் அவதி

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மதிய உணவு சாப்பிடுகின்றனர்
மதிய உணவு சாப்பிடுகின்றனர்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்கள் கூட்டத்திற்கு ஏற்றார்போல் தடுப்பூசி தயார் செய்யாமல் நாளொன்றுக்கு சுமார் 300 லிருந்து 500 என்று ஒரு இடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி முகாம்களில் செலுத்தும் பணிகள் காலை 9 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகின்றது.

ஆனால் இதற்காக காலை 4 மணி அளவிலேயே மக்களை ஒரு பள்ளியில், ஆட்டுப்பட்டியில் போட்டு அடைப்பதுபோல போட்டு அடைத்து பின்னர் சுமார் 7 மணி நேரத்திற்கு பின் தடுப்பூசி போடப்பட்டு அவர்களை வழி அனுப்பி வருகின்றனர்.

மேலும் ஏழு மணி நேரம் என்பதால் அவர்களது உறவினர்கள் கொளுத்தும் வெயிலுக்கு குடைகளையும், அதே கேட்டின் வழியாக உணவும் கொடுத்து வரும் சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது.

கரூர் நகரில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் பங்கேற்க, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் என்று பலரும் அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் அவர்களில் 500 நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அவர்களில் வரிசையில் நிற்கும் நபர்களை காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் பள்ளியின் முன் உள்ள, கேட்டினை பிறந்து அவர்களை சமூக இடைவெளியின் கீழ், வெயிலில் அமர வைக்கின்றனர்.

பின்னர் காலை 9 மணி முதல் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தவுடன் பொதுமக்களை பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் அமர வைத்து காலை 11 மணி வரை அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் காலை முதல் காத்திருந்த மக்களுக்கு அவர்களது உறவினர்கள் டிபன் கடை அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி வந்தும், வெயில் கொளுத்துவது உடைகளை வீட்டிலிருந்து எடுத்து வந்தும், பள்ளியின் முன்புறம் உள்ள கேட்டில் கொடுக்கப்பட்டு அவர்கள் குடையுடனும் அமர்ந்து தங்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

10 நாளில் தடுப்பூசி போடனும்; இவங்களுக்கெல்லாம் கெடு!

இதேபோல் மாற்றுத்திறனாளிகளும், நீண்ட நேரம் அமர்ந்து அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும், கரூர் மாவட்டத்தில் இன்று 24 இடங்களில் 6750 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

ஆங்காங்கே, அதிகாலை முதலே வரும் பொதுமக்கள் வரிசையில் அமர்ந்தவாறே உணவு அருந்துவது, டீ குடிப்பது, பிஸ்கட், பன் சாப்பிட்டு வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி வருகிறது. இதுவரை கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 726 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி