ஆப்நகரம்

கோவில் விவகாரம்; பூசாரிகள் பரபரப்பு தீர்மானம்!

கரூரில் நடந்த கூட்டத்தில் பூசாரிகள் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Samayam Tamil 21 Apr 2021, 1:31 pm
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நேற்று பூசாரிகள் முன்னேற்ற சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Samayam Tamil பூசாரிகள் கூட்டம் நடக்கிறது.
பூசாரிகள் முன்னேற்ற சங்க கூட்டம் நடைபெற்றது.


4 நாளில் ஒரே வீட்டில் 4 மரணம்!

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொது செயலாளர் சதீஸ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கிராம கோயில் நலவாரிய அட்டையை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய நலவாரிய அட்டையை புதுப்பித்து தர வேண்டும். கொரோனா காலங்களில் அரசு நடைமுறைப்படுத்திய கட்டுப்பாடுகளுக்கு கோவில் பூசாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம்; அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா?

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களில் இந்த 2 மாதங்களில் வரும் திருவிழாக்களை அரசு நடைமுறைப்படுத்தும் கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும். இவ்வாறாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஒன்றிய செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

அடுத்த செய்தி