ஆப்நகரம்

கரூர் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர்; மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!

கரூர் மாநகராட்சியில் நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் கரூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் கழிவு நீர் தொட்டி திறந்து கிடப்பதாகவும், அதை சரி செய்யாததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். மேயரின் விளக்கத்துக்குப் பிறகும் அதிமுக உறுப்பினர் சமாதானம் அடையாமல் கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 27 Sep 2022, 10:37 am

ஹைலைட்ஸ்:

  • கரூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது
  • கரூரில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர்
  • அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கரூர் மாநகராட்சி கூட்டம்
கரூர் மாநகராட்சி கூட்டம்
கரூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரி முன்னிலையில் இருந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மேயர் கவிதா கணேசன், கரூரில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி பகுதியில் தேவையான பல்வேறு அடிப்படை வசதி குறித்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து பேசினர். குறிப்பாக, மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக அவற்றை வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதே போல அதிமுக உறுப்பினர் சுரேஷ், தனது வார்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கழிவறை தொட்டி திறந்து இருப்பதாகவும், குழந்தைகள் பாதுகாப்பற்ற முறையில் வந்து செல்வதாக புகார்கள் எழுந்தது.

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு: காரணம் யார் என முதல்வருக்கு தெரியும்- வானதி சீனிவாசன்!

அதை முறையாக சரி செய்யக் கூறி கடந்த கூட்டத்தில் தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறினார்.
இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளித்த மேயர் கவிதா கணேசன்; அங்கன்வாடி மைய பராமரிப்பு என்பது மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பணியாகும்.

எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேயரின் விளக்கத்துக்குப் பிறகும் அதிமுக உறுப்பினர் சமாதானம் அடையாமல் கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி