ஆப்நகரம்

அட பாவமே பள்ளி மாணவியாச்சே; போலீஸ் வேனை மக்கள் முற்றுகை!

அரவக்குறிச்சி அடுத்த பவுத்திரம் அருகே லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி தலை நசுங்கி பலியானார். இதனால் டிரைவரை கைது செய்யக்கோரி போலீஸ் வேனை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 12 May 2021, 2:56 pm
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பவுத்திரம் காலனியை சேர்ந்தவர் ஹர்ஷிதா. ஒன்பதாவது மாணவி. இன்று காலை மாணவி ஹர்ஷிதா பவுத்திரம்-புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள கூட்டுறவு பால் பண்ணைக்கு சென்றார்.
Samayam Tamil போலீசை கண்டித்து போராட்டம் நடக்கிறது
போலீசை கண்டித்து போராட்டம் நடக்கிறது


பின்னர் பண்ணையில் பால் ஊற்றி விட்டு வரும்பொழுது பவித்திரத்தில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் கம்பெனியின் லாரி திடீரென மாணவி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார். இதனையறிந்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

ஜோதி மணிக்கு இவ்வளவு பெரிய மனசா?; ஆக்சிஜன் வாங்க நிதியுதவி கேட்டு கடிதம்!

அதனடிப்படையில் க.பரமத்தி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவர் எனக் கூறி வேறு ஒருவரை கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய கோரி க. பரமத்தி காவல் துறையினரின் வேனை செல்ல விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு க.பரமத்தி காவல் ஆய்வாளர் நேரில் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை பேசிய பிறகே காவல் துறை வேனை பொதுமக்கள் விடுவித்தனர்.

அடுத்த செய்தி