ஆப்நகரம்

டாக்டர் கிடைக்கல; கொரோனா சிகிச்சை மையத்தை மூடியாச்சு!

நாமக்கல்லில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இங்கு போதிய மருத்துவர்கள் வசதி இல்லாததால் கொரோனா சிகிச்சை மையம் பூட்டப்பட்டு உள்ளது.

Samayam Tamil 16 May 2021, 9:16 am
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்களில் 51 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளை திருச்சி மற்றும் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil நாமக்கல் அரசு மருத்துவமனை
நாமக்கல் அரசு மருத்துவமனை


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் காட்டுத் தீ போல் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 நபர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். கடந்த 3 நாட்களில் என கணக்கிட்டால் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு முகாம்களில் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பி விட்டதால் கொரோனா நோயாளிகளை அண்டை மாவட்டமான சேலம் மற்றும் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலெக்டருக்கே கொரோனா; எங்க போய் முடியுமோ தெரியல!

இந்த நிலையில் மாவட்ட சுகாதார துறையினர் சார்பில் நாமக்கல்லில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இங்கு போதிய மருத்துவர்கள் வசதி இல்லாததால் கொரோனா சிகிச்சை மையம் பூட்டப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களை விரைந்து காக்கும் வகையில் போதிய மருத்துவர்கள் மற்றும் படுக்கை வசதிகளை உறுதி செய்து கொண்டு கொரோனா சிகிச்சை மையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி