ஆப்நகரம்

கருணாநிதி தொகுதிக்கா இந்த நிலை?; ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை அகற்றம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் வைக்கப்பட்டிருந்த ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. இதை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி செம்மொழியான தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 10 Jun 2021, 12:07 pm
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை இருந்தது. இந்த பலகை அகற்றப்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிடக்கிறது. இந்த பலகையை மீண்டும், அதே இடத்தில் பொருத்த வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது
பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது


கரூர் மாவட்டம் குளித்தலை சமூக ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் கரூர் மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் குளித்தலை நகராட்சி ஆணையரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்ற கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

குளித்தலை நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை இருந்தது. இந்த பலகை அகற்றப்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிடக்கிறது. இந்த பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி செம்மொழியான தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் அருகில் டைமஸ் சிட்டி என்ற புதிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் தற்போது உருவாகிவிட்டன. ஆனால் இங்கு தெரு விளக்குகள் எதுவும் இன்று வரை பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மக்கள் இரவு நேரங்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பலமுறை கெஞ்சியும் விடாமல் தொல்லை; மருத்துவர் மீது பெண் ஊழியர் பகீர் புகார்!

எனவே, நகராட்சி ஆணையர் இந்த இரண்டு கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி