ஆப்நகரம்

கொரோனா விழிப்புணர்வு; கரூரில்.. உற்சாக வரவேற்பு!

கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணத்தின் 6ம் நாளான இன்று கலைமாமணி பழநியப்ப பிள்ளை, பாடகர் ராஜேந்திரன் குழுவினர் கரூர் வருகை தந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 20 Sep 2021, 6:50 pm
கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணத்தின் 6ம் நாளான இன்று கலைமாமணி பழநியப்ப பிள்ளை, பாடகர் ராஜேந்திரன் குழுவினர் கரூர் வருகை தந்தனர்.
Samayam Tamil கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்


இவர்களை க௹ர் மெஜஸ்டிக் லயன் சங்கம், விக்டரி பேர்ட்ஸ் லயன் சங்கம், பிளாட்டினம் லயன் சங்கம் சார்பில் ஆரியாஸ் உணவகம் முன் வரவேற்று நூலாடை, புத்தகம் , பேனா, எரிபொருள் செலவிற்கு பங்களிப்பு வழங்கியும், கரூர் விக்டரி பேர்ட்ஸ் சார்பில் வண்ணக் குடை வழங்கியும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் மேலைபழநியப்பன் வரவேற்புரை ஆற்றினார். பயணம் மேற்கொண்டுள்ள இருவரும் இசைக்கருவிகளுடன் பாடல்கள் பாடி, விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மெஜஸ்டிக் செயலர் வைஷ்ணவி மெய்யப்பன், கே.வி.பி.லயன்ஸ் சூர்யா கதிரவன், சூர்யபிரபு, பிளாட்டினம் கணேஷ், ராமலிங்கம், பசுமை அமைப்பு, 99 தன்னார்வ சேவை அமைப்பு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நகை கடன் தள்ளுபடி; அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

கரூர் அரசு கலைக் கல்லூரி இளம் அரிமா ஆலோசகர் டாக்டர் கார்த்திகேயன், லயன் ஜெயா பொன்னுவேல் பத்மாவதி, மீனாட்சி உள்ளிட்டோரும் பங்கு பெற்றனர் தொடர்ந்து தாராபுரம் செல்லும் குழுவினரை மேலை பழனியப்பன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

அடுத்த செய்தி