ஆப்நகரம்

மது, கடன் பிரச்சினை ஒரு நாளில் 4 பேர் கிருஷ்ணகிரியில் தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு உரிய விழிப்புணர்வு பரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Samayam Tamil 21 Oct 2021, 11:19 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள குருகபட்டியை சேர்ந்தவர் சென்ன கிருஷ்ணன். வயது 45. விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.
Samayam Tamil மது, கடன் பிரச்சினை ஒரு நாளில் 4 பேர் கிருஷ்ணகிரியில் தற்கொலை!


இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த சூழலில் படவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கல்லாவவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை யாரப் தர்கா பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத். வயது 47. தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கெலமங்கலத்தை அடுத்த ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. வயது 45. தொழிலாளி. இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

தகாத உறவை தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கதியை பாருங்க!
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதை அடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலி ஆனார். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தன். வயது 55. ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இதற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் அவர் நேற்று முன்தினம் பலியானார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் வெவ்வேறு பகுதிகளில் நான்கு பேர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலையை தடுக்க அரசு மருத்துவமனை பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அடுத்த செய்தி