ஆப்நகரம்

தங்கம் வேட்டையாடிய சிங்கம்; பொறி வைத்து பிடித்த போலீஸ்!

ஒசூர், மூக்கண்டப்பள்ளியில் பூட்டிய வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளை அடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 260 சவரன் தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர்.

Samayam Tamil 8 May 2021, 3:48 pm
ஓசூர், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் மாதையன். கடந்த ஏப்ரல் 18ம் தேதி மாதையன் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் புதிதாக கட்டி வரும் தனது வீட்டை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டவருடன் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
கைது செய்யப்பட்டவருடன் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்


இதனை அறிந்த மர்ம நபர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள மாதையன் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகையை கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றார்.

மறுநாள் மாதையன் குடும்பத்துடன் திரும்பியபோது வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மாதையன் சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.

சரக்கு மட்டும்தான் பிளாக்ல கிடைக்குமா?; பின்வாசல் திறந்த துணி கடைகளுக்கு சீல்!

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் ஓசூர் டிஎஸ்பி முரளி மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில் மூக்கண்டப்பள்ளி எம்.எம் நகரை சேர்ந்த லூர்துராஜ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாதையன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததை லூர்துராஜ் ஒப்புக்கொண்டார். உடனே லூர்துராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 260 சவரன் தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர்.

அடுத்த செய்தி