ஆப்நகரம்

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குரங்கு.. சிகிச்சை அளித்து மனிதம் போற்றிய கிருஷ்ணகிரி மக்கள்!

ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குரங்கிற்கு அங்கிருந்த குடியிருப்புவாசிகள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Oct 2022, 9:38 am
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து குரங்குகள் உணவைத் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் கோயில் அருகே மின்சார வயரில் தொங்கி விளையாடியது அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
Samayam Tamil Krishnagiri Monkey treatment


மின்சாரம் தாக்கியதில் கை, கால் பகுதிகளில் தீப்புண் ஏற்பட்டு படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்து முடியவில்லை. இதனால் வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்தும் யாரும் வராததால் வலியால் துடித்துக் கொண்டிருந்த குரங்கை மீட்க பொதுமக்களே முயற்சி செய்து நீண்ட நேரம் போராடி அதனைப் பிடித்து மருத்துக்கள் பூசி சிகிச்சை அளித்தனர்.

மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்க தகவல் அளித்தும் வராத அதிகாரிகள் செயலால் பொதுமக்கள் வேதனைந்தனர். மீண்டும் குரங்கு வலியால் துடித்து கொண்டிருந்ததை பார்த்த இளைஞர்கள் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். அதனால் உடனே வன ஊழியர்கள் சென்று அக்குரங்கை பிடித்து வன சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று சிகிக்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி