ஆப்நகரம்

ஒரே கல்லில் 1.5 அடி நீள நாதஸ்வரம்... 11ஆம் வகுப்பு மாணவன் அசத்தல்

சிறுவயது முதலே சிற்பம் செதுக்குவதில் ஆர்வத்துடன் இருந்து வந்த கார்த்திக் ராஜா, இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் நாதஸ்வரம், வாள், மணி, குத்துவிளக்கு போன்றவற்றை சிற்பமாக செதுக்கி உள்ளார்.

Samayam Tamil 1 Nov 2020, 4:04 pm
கொரோனா ஊரடங்கு காலம் பலருக்கும் பலவிதங்களில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ஒரே கல்லிலான சிற்பங்களை வடிவமைத்துள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கல்லில் சிற்பங்கள் செய்வதில் பாரட்ட என்ன புதிதாக இருக்கிறது என்று கேட்டால், இந்தக் கல் நாதஸ்வரம் மூலம் இசைக்க முடியும் என்பதுதான்.
Samayam Tamil கல் நாதஸ்வரம் இசைக்கும் காட்சி


மதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்த பாலமுருகன் இவர் விளாச்சேரி தமிழ்நாடு இசைகல்லூரி அருகே சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். பாலமுருகனுக்கு 2 மகன்கள். இதில் இளைய மகன் கார்த்திக் ராஜா. தற்போது 11ஆம் வகுப்பு முடித்துள்ள இவர், தற்போது 12ஆம் வகுப்பிற்கு ஆன்லைன் வகுப்புகளை முடித்து விட்டு மீதமுள்ள நேரங்களில் தந்தைக்கு உதவியாக சிற்பக்கலை கூடத்திற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, சிறுவயது முதலே சிற்பம் செதுக்குவதில் ஆர்வத்துடன் இருந்து வந்த கார்த்திக் ராஜா, இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் நாதஸ்வரம், வாள், மணி, குத்துவிளக்கு போன்றவற்றை சிற்பமாக செதுக்கி உள்ளார்.

ஒரே கல்லில் 1.50 அடியும்,1.5 கிலோ எடையும் கொண்ட நாதஸ்வரத்தை வடிவமைத்துள்ளார் து,மரத்தினால் வடிவமைக்கப்படும் நாதஸ்வரத்தில் வரும் ஸ்ருதியும் கல்லில் செதுக்கப்பட்ட சுருதியும் ஒத்திருப்பதாக இசை கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.


கிராமிய கலைகளை கற்ற மாணவி நிகழ்த்திய சாதனை... இவர் கோவையின் பெருமை!

மேலும் கற்களாலான நாதஸ்வரமானது கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஆழ்வார் திருநகரி ஆகிய கோயில்களில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரானா ஊரடங்கு காலம் பல்வேறு தரப்பினரை பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் பள்ளி மாணவனின் இந்த சிற்பக்கலை முயற்சி அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அடுத்த செய்தி