ஆப்நகரம்

வைகை ஆற்றில் சடலமாக 2 சிறுமிகள்: பின்னணி என்ன?

மதுரை வைகை ஆற்றில் இரு சிறுமிகளின் உடல்களை மீட்ட கரிமேடு போலிசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 7 Dec 2020, 5:11 pm
மதுரை ஆரப்பாளையம் அருகே மறவர் 2வது தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகன்-முத்து தம்பதி. இந்த தம்பதிக்கு 4பெண் குழந்தைகள் இருந்துள்ளது.
Samayam Tamil வைகை ஆற்றில் சடலமாக 2 சிறுமிகள்: பின்னணி என்ன?
வைகை ஆற்றில் சடலமாக 2 சிறுமிகள்: பின்னணி என்ன?


மூத்த 2 பெண் குழந்தைகளான சுஜி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அதன்பின் இருவரையும் காணவில்லை.

இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிகள் 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமிகள் 2 பேரின் உடல்கள் ஆரப்பாளையம், எல்ஐசி பாலம் அருகே மிதந்துகொண்டிருந்தது.

இதைப் பார்த்த பொதுமக்கள் போலீருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றின் உதவியோடு சம்பவ இடத்திலிருந்து சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலித் பிணத்தைப் பாலத்திற்குள் விடாத ஊர் மக்களும் போலீசும்: 50 பேர் மீது வழக்குப் பதிவு!

சிறுமிகள் உயிரிழப்பு குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ள, சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சிறுமிகளின் உடல்களை மீட்டபோது அந்தப் பகுதியில் பொதுமக்கள் பார்வையிட குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடுத்த செய்தி