ஆப்நகரம்

கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபத்து; மதுரையில் கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபத்தில் கூலி தொழிலாளி தலை நசுங்கி பலி. மேலும் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 15 Aug 2022, 11:34 am

ஹைலைட்ஸ்:

  • உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கிணறு தோண்டும் பணி
  • கற்களை மேலே எடுக்கும் போது கல் தவறி கீழே விழுந்து விபத்து
  • கூலி தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கிணறு தோண்டும் பணி
கிணறு தோண்டும் பணி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மள்ளப்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த போது கிணற்றில் இருந்து கற்களை மேலே எடுக்கும் போது கல் தவறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.
பி.டி.ஆர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு; அண்ணாமலை பதவிக்கு சிக்கல்?

இதில் கிணற்றுக்குள் பணி செய்து கொண்டு இருந்த சேலத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்ற கூலி தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் இருந்த சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி, திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரவி என்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி போலிசார் படுகாயமடைந்த பெரியசாமி, ரவி என்ற இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிணற்றுக்குள் உயிரிழந்த பரமேஸ்வரன் உடலை மீட்டு உடற் கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி