ஆப்நகரம்

மதுரையில் அதிமுக எதையும் செய்யவில்லை: பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி சாடல்!

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வணிகர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மதுரையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதைத் தொடர்ந்து மூர்த்தி இந்த கருத்தைப் பதிவு செய்தார்.

Samayam Tamil 30 Jul 2021, 9:35 pm
மதுரை மாவட்டத்தில் உள்ள புது தாமரைபட்டி கிராமத்தில் புதிய துணை ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
Samayam Tamil மதுரையில் அதிமுக எதையும் செய்யவில்லை: பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி சாடல்!


தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அவர் கூறியதாவது:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தொகுதியில் மட்டுமே நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது. பிற தொகுதிகள் எதிலும் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பாக நமக்குப் புகார் வந்திருக்கலாம். அதனால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துகிறது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடுகள் நடந்தால் தொடர்பாகத் தகவல் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மகத்தான சேவையைச் செய்து கொண்டிருக்கிறோம். போலியான ரசீதை வைத்துக்கொண்டு தொழில் செய்து வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகம் வரலாறு மறையாம இருக்கணும் முதல்வரே: எம்பி சு வெங்கடேசன் கடிதம்!
மூன்று மாதத்தில் அதிமுக செய்ததை விட அதிகமாகவே நாங்கள் செய்திருக்கிறோம். அதிமுகவினர் கொஞ்சம் கொஞ்சமாக திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சென்ட் நிலம் கூட கோயில் நிலங்களைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்யக் கூடாது என்பதற்குக் கணினியில் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அமைக்கப்பட்ட பதிவாளர் மேடைகள் 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி