ஆப்நகரம்

இங்கும் விவசாயிகள் போராட்டம், ஆனால் இது வேறு பிரச்சினை!

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைச் செய்த பாக்கி பணத்தை வழங்கக்கோரி விவசாயிகள் கஞ்சி காய்ச்சி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 6 Jan 2021, 11:51 am
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கரும்பு அரவைச் செய்த பாக்கி பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தி, ஆலை அரவை பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Samayam Tamil இங்கும் விவசாயிகள் போராட்டம், ஆனால் இது வேறு பிரச்சினை!
இங்கும் விவசாயிகள் போராட்டம், ஆனால் இது வேறு பிரச்சினை!


அரசு முதல் தவணையாக அனுப்பி உள்ள ரூ. 5 கோடியே 93 லட்சம் பணத்தை விவசாயிகளுக்குக் காசோலையாகக் கொடுக்க வலியுறுத்தியும், ஆலை அலுவலகம் முன்பு வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கஞ்சி காய்ச்சி, காத்திருப்பது போல் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஆலை தொழிலாளர்களின் 10 மாத சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வலியுறுத்திக் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு குழுவைக் கலைக்கச் சொல்லி மனு: இறுதி நேரத்தில் பிரச்சினை!

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

அடுத்த செய்தி