ஆப்நகரம்

மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் முதியவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கியது

Samayam Tamil 1 Mar 2021, 4:07 pm
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின் படி இன்று மதுரை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரையில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கியது.
Samayam Tamil covid vaccine


மேலும் சட்டசபை தேர்தலில் பணியாற்ற கூடிய அலுவலர்கள், பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி பெறும் பயனாளிகள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் ஒரு மணி நேர கண்காணிப்புக்கு பிறகே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், கோவின் செயலி வழியே முன்பதிவு செய்தும் நேரடியாக பதிவு செய்தும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

பல் கூச்சத்தால் அவதிப்படறீங்களா? இதுல ஒண்ணு செய்யுங்க, கூச்சம் ஓடியே போகும்!

ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற அங்கரிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது, முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த கூடிய தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்தி தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

இவ்வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

அடுத்த செய்தி