ஆப்நகரம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை பிரதிஷ்டை செய்து பால், பன்னீர், சந்தன அபிஷேகங்களை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தார்.

Samayam Tamil 16 Jan 2021, 10:44 am
மதுரை அருகே முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதா-விற்கு கோவில் எழுப்பியுள்ள அமைச்சர் இன்று அந்த கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தார்
Samayam Tamil எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கோயில்


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா - விற்கு தனது சொந்த செலவில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோவில் எழுப்பியுள்ளார்.

இந்த கோவிலை வரும் 30ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பி.எஸ். இணைந்து திறந்து வைக்க உள்ள சூழலில், இன்று அதன் முன்னேற்பாடாக எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை பிரதிஷ்டை செய்து பால், பன்னீர், சந்தன அபிஷேகங்களை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி: பாஜகவின் அஜண்டா என்ன?

உடன் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் பா.நீதிபதி, பெரியபுள்ளான் என்ற செல்வம், சரவணன் உள்ளிட்டோரும் அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு பால் அபிஷேகம் செய்தனர்.

அடுத்த செய்தி