ஆப்நகரம்

சென்னையை போல் மதுரை மக்களுக்கும் ரூ.1000 வழங்குமா அரசு?

மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரூ.1,000 நிவாரண தொகை வழங்கப்படுமா என்ற கேள்வியும் கோரிக்கையும் எழுந்துள்ளது

Samayam Tamil 23 Jun 2020, 8:46 pm
கொரோனா பரவலின் நிலைமை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் படுமோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தலைநகர் சென்னை, ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சப்பட வைக்கும் நகரமாக மாறியிருக்கிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ், கடந்த 19ஆம் தேதி முதல் வருகிற 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் எவ்வளவு தெரியுமா?

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வந்ததால், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பறவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளில் வருகிற 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தது போல், மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.1,000 நிவாரண தொகை வழங்கப்படுமா என்ற கேள்வியும், கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முழுஊரடங்கு காரணமாக மதுரையில் ரூ.1000 உதவித் தொகை வழங்குவது பற்றி முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி