ஆப்நகரம்

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது: ஐகோர்ட் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?

கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவைப் பிறபித்துள்ளது.

Samayam Tamil 22 Jun 2021, 10:07 am
டாஸ்மாக் கடைகளை மூட கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டு வருவதால் அதைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறபித்தது.
Samayam Tamil டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது: ஐகோர்ட் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?


திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்:
கொரோனா நோய்த்தொற்றின் 2ஆம் நிலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில் வழிபாட்டுக் கூட்டங்கள் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பிள்ளையார் கோயில் இடத்தை ஆக்கிரமித்த அதிமுக அமைச்சருக்கு, சேகர்பாபு விட்ட மிரட்டல்!
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். மேலும் கொரோனா தொற்று பரவல் சரி ஆகும் வரை அனைத்து மதுக் கடைகளையும் மூட மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்ப பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தற்போது ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.

அடுத்த செய்தி