ஆப்நகரம்

மதுரை ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் வந்திறங்கினர்!

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் மதுரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 28 Feb 2021, 4:10 pm
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து தமிழகம் முழுவதிலும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரத் தொடங்கியது.
Samayam Tamil மதுரை ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் வந்திறங்கினர்!


இதையடுத்து சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்காக 9 கம்பெனிகளை சேர்ந்த ஆயிரத்து 130 மத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் அசாமிலிருந்து ரயில் மூலம் மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர்.

ரயில் நிலையம் வந்தவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் குழு வாரியாக வெவ்வேறு மாவட்டங்களுக்குப் பாதுகாப்புப் பணிக்காக அரசு வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

Madurai: உயிரிழந்த அழகர்கோயில் ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை

முன்னதாக அசாமில் படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புப் படையினர் உள்ளூர் காவலர்களோடு இணைந்து தேர்தல் வாக்குப்பதிவு நாள் வரை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி