ஆப்நகரம்

குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு: மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்!

மதுரை விமானநிலையத்திலிரிந்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மீனாட்சி அம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 18 Feb 2023, 3:21 pm
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு டெல்லியில் இருந்து 8.40 மணிக்கு ராணுவ விமானம் மூலம் கிளம்பி 11.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.
Samayam Tamil president in madurai


மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு!

மதுரை விமான நிலையம் வருகை தந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் வரவேற்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து 40 அரசு வாகனங்கள் அணிவகுப்பில் மீனாட்சி அம்மன் கோவில் சென்றார்.

கோவை கிளம்பிய குடியரசுத் தலைவர்!
கண்கள் சிவந்த ஸ்டாலின் - கோட்டைக்கு பறந்த புகார்: அமைச்சர் பெயரை சொல்லி வசூல் வேட்டை!
மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அவருக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்தது. சிறப்பு தரிசனம் முடித்த பின்னர் அங்கிருந்து சர்க்யூட் ஹவுஸ் சென்று மதிய உணவு முடித்து விட்டு மறுபடியும் மதுரை விமான நிலையம் வந்தடைந்து மதியம் 2 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்.

போக்குவரத்து மாற்றம்!

குடியரசுத் தலைவர் வருகையோட்டி அவனியாபுரம் - அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வில்லை. அவனியாபுரம் - செம்பூரணி சாலை வழியாக வைக்கம் பெரியார் நகர் ரிங் ரோடு சென்று அங்கிருந்து மண்டேலா நகர் செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

கார் விபத்து!

இறையன்பு வைத்திருக்கும் இரண்டு ஆப்ஷன்: ஸ்டாலின் முடிவு என்ன?

இந்நிலையில் அவனியாபுரம் செம்பூரணி ரோடு சந்திப்பில் வைக்கம் பெரியார் நகர் ரோட்டில் குடியரசுத் தலைவர் வரும் பாதையில் கார் ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்த அவனியாபுரம் காவல்துறையினர் அந்தக் காரை பளுதூக்கும் இயந்திரம் வைத்து தூக்கி, அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். குடியரசுத் தலைவர் செல்லும் பாதையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக விபத்து நடந்ததால் அந்த இடத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி