ஆப்நகரம்

Land Survey: 30 நாட்களுக்குள் சர்வே செய்யாவிட்டால், சம்பளத்தில் 2500 கட்

சுமார் 2500 ரூபாயை சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யலாம். மேலும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Samayam Tamil 11 Oct 2020, 7:26 am
நில அளவீடு செய்வதற்கு கட்டணம் செலுத்திய பிறகும், நில அளவீடு செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அரசுப் பதிவு பெற்ற நில அளவை அலுவலகங்களில் இது போன்ற குற்றச்சாட்டுடனும் கோரிக்கையுடன் வருபவர்கள் ஏராளம்பேரைப் பார்க்க முடியும்.
Samayam Tamil madurai-high-court


இந்நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான உத்தரவை வெளியிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

நில அளவீடு செய்வதற்கு கட்டணம் செலுத்திய நாளிலிருந்து அடுத்த 30நாட்களுக்குள் நில அள்வை செய்து முடிக்க வேண்டும். அதற்கு மேல் தாமதித்தால், பயனருக்கு அவரது கட்டணத் தொகையை அரசு திரும்பத் தர வேண்டும்.

அதற்காக சுமார் 2500 ரூபாயை சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யலாம். மேலும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு தற்போது சில ஊழல் அதிகாரிகளால் ஊழல் மலிந்த நிர்வாகமாகிவிட்டது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி