ஆப்நகரம்

மதுரைவாசிகள் கவனத்திற்கு... சூரப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்த ஐகோர்ட் அனுமதி!

மதுரை மாவட்டம் சூரப்பட்டி கிராமத்தி ல், விதிமுறைகளை பின்பற்றி மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 21 Apr 2023, 5:11 pm
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசு என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
Samayam Tamil madurai
madurai


மஞ்சு விரட்டுக்கு அனுமதிக்க கோரிக்கை

அந்த மனுவில், கொட்டாம்பட்டி அருகே உள்ள சூரப்பட்டி கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம். சூரக்குடி கிராமத்தில் முன்னோர்கள் காலத்திலிருந்து மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி நாடகம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். அதன் பின்பு மஞ்சு விரட்டும் பாரம்பரியமாக நடைபெறுகிறது. கடந்த வருடம் உயர்நீதிமன்றம் கிளையில் உத்தரவு பெற்று நடத்தினோம்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 2023: பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்.. கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.!
இந்த ஆண்டு 02.05.2023 தேதியன்று அம்மன் எழுந்தருதல் , 03.05.2023 அன்று இரவு நாடகம் நடைபெறும் . அதன்பின்பு 04.05.2023 அன்று காலை 9.00 மணியில் இருந்து மதியம் 1.00 மணி வரை மஞ்சு விரட்டு நடைபெறும். ஆகவே, கடந்த ஆண்டை போல மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அனுமதி வழங்கியது மதுரை ஐகோர்ட்

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரிய கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஜல்லிகட்டு நடத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட பட்டியலில் கிராமத்தின் பெயர் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பட்டியலில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் அனுமதி வாங்க தேவையில்லை. ஆனால், நாங்கள் பாரம்பரியமாக நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு அனுமதி பெற்று நடத்தினோம். அதேபோல், இந்த ஆண்டும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறினார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், விதிமுறைகளை பின்பற்றி மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்டார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி