ஆப்நகரம்

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்!

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக விமானத்தில் கோஷமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியாவுக்கு எதிரான வழக்கில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 26 Apr 2022, 6:08 am
தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா என்ற மாணவி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "கனடாவிலுள்ள மாண்ட்ரீல் பல்கலையில் படித்து வரும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் 2019 செப்டம்பர் 3-ம் தேதி பயணித்தேன்.
Samayam Tamil tamilisai soundararajan
தமிழிசை சவுந்தரராஜன்


என்னுடன் அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. இதனால், விமானத்தில் இருந்து இறங்கும் நேரத்தில் மத்திய அரசை விமர்சித்து கருத்தை தெரிவித்தேன்.

இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்துறையினர் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

எனவே, என் மீதான வழக்கில் காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் சோபியா மீதான வழக்கை விசாரிக்க ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கானது திங்கட்கிழமை மீண்டும் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, தமிழிசை சவுந்தராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக உள்ளதால் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு அதற்குப் பதிலாக முதலில் புகார் கொடுத்த தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் என்பவரை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்கிறது. மேலும், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜீன் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி