ஆப்நகரம்

திருப்பரங்குன்ற கோயிலை வைத்து, இந்து-முஸ்லிம் பிரச்சினை? பெரும் பதற்றம்!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக இரு சமூகத்திடையே பிரச்சினை ஏற்படும் என்றும் இதன் காரணமாகச் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது...

Samayam Tamil 29 Nov 2020, 1:01 pm
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil திருப்பரங்குன்ற கோயிலை வைத்து, இந்து-முஸ்லிம் பிரச்சினை? பெரும் பதற்றம்!
திருப்பரங்குன்ற கோயிலை வைத்து, இந்து-முஸ்லிம் பிரச்சினை? பெரும் பதற்றம்!


மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நீதிமன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.

ஆனால் திருப்பரங்குன்றம் மலைமேல் சிக்கந்தர் பாவா பள்ளிவாசல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி பல வருடங்களாகத் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகின்றனர்.

விவசாயிகளைப் பாதுகாக்காமல் வேல் யாத்திரை நடத்தும் பாஜக

இது ஆகம விதிகளுக்கு முற்றிலும் முரணானது எனக் கூறி சமீப நாட்களாக இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள், கார்த்திகை தீபம் மலைமேல் உள்ள கைலாசநாதர் கோயிலில்தான் ஏற்ற வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக் கிழமை காலை இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சிவராஜ் தலைமையில் 3 உதவி ஆணையர்கள் 12 ஆய்வாளர்கள், 25 சார்பு ஆய்வாளர்கள், உள்ளிட்ட 250 போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வஜ்ரா வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காடேஸ்வரன் சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி