ஆப்நகரம்

மதுரை டூ உத்தரப் பிரதேசம்: தொழிலாளர்கள் ஹேப்பி ஜெர்னி!!

புலம்பெயர் தொழிலாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம், மதுரையில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

Samayam Tamil 18 May 2020, 9:55 pm
மதுரை மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கினால் பிழைக்க வழி இல்லாமலும், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil migrant


அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மதுரை மாவட்ட நிர்வாகமும், தெற்கு ரயில்வேயும் இணைந்து மதுரை ரயில் நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள "மவுனத் பஞ்சன்" என்ற ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயிலை இயக்கியுள்ளன.

இந்த சிறப்பு ரயில் இன்று (மே 18) மாலை 05.25 மணிக்கு புறப்பட்டது. நாளை மறுநாள் மாலை 5:40 மணிக்கு மவுனத் பஞ்சன் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயிலில் மொத்தம் 1,552 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பயணிக்கின்றனர்.

மதுரையில் ஊரடங்கு தீவிரமா? சொதப்பிய காவல்துறையின் பிளான்...

அனைத்து ரயில் பெட்டிகளும் கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாக முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு ரயிலில் பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வினய், காவல் துறை ஆணையர் டேவிட்ஸன் தேவாசீர்வாதம், துணை ஆணையர் கார்த்திக், ரயில்வே அதிகாரிகள் ஓ.பி. ஷாவ், கூடுதல் கோட்டமேலாளர் பிரசன்னா, மூத்த வணிக மேலாளர் விவேக் சர்மா, இயந்திரவியல் அதிகாரி அன்பரசு, பாதுகாப்பு ஆணையர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பயணிகளை வழியனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி