ஆப்நகரம்

குவாரிகளுக்கு மீண்டும் ஆபத்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!

சட்டவிரோத குவாரிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறபித்துள்ளது.

Samayam Tamil 28 Jul 2021, 8:18 pm
புதுக்கோட்டையை சேர்ந்த இளையராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
Samayam Tamil குவாரிகளுக்கு மீண்டும் ஆபத்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!


அந்த மனுவில் அவர்:
கந்தர்வகோட்டை அரியாணிபட்டி, குளத்துார் மின்னத்துார் குறிப்பிட்ட பகுதிகளில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கிராவல் மணல் குவாரி நடக்கிறது. அதிக ஆழத்தில் மண் எடுக்கின்றனர்.

இதனால் விவசாயம் பாதிக்கபடுகிறது. மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சட்டவிரோத குவாரி நடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் , கனிமவள உதவி இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே சட்ட விரோத குவாரி நடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து குவாரிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், எஸ் ஆனந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்த்து. அப்போது மனு தாரரின் கோரிக்கை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்து விதி மீறி சட்டவிரோதமாக நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி