ஆப்நகரம்

மதுரை அருவியில் வைத்து, மூதாட்டி என்றும் பார்க்காமல் வனத்துறை அதிகாரி வெறிச் செயல்!

மதுரையின் குற்றாலம் என்ற அடையாளத்தைச் சுமந்து நிற்கும் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் மூதாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்...

Samayam Tamil 10 Nov 2020, 2:07 pm
மதுரை குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சியைக் காண வந்த மூதாட்டியைத் தாக்கிய வனத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil மதுரை குற்றாலத்தில் வைத்து, மூதாட்டி என்றும் பார்க்காமல் வனத்துறை அட்டூழியம்!
மதுரை குற்றாலத்தில் வைத்து, மூதாட்டி என்றும் பார்க்காமல் வனத்துறை அட்டூழியம்!


மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வயது 50. இவர் உறவினர் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார் என அடையாளம் சொல்லப்படுகிறது.

இவர் தனது குடும்பத்தாருடன் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி ரமணகிரி ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். அங்குச் சாமி தரிசனம் செய்துவிட்டு குட்லாடம்பட்டி அருவியின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஓடைக்கரையில் நின்று தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு சோழவந்தான் வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரியும் முருகன்(44) என்பவர் ரோந்து வந்துள்ளார். ராமகிருஷ்ணன் உறவினர்களிடம் இப்பகுதியில் மக்கள் நடமாட அனுமதியில்லை என எச்சரிக்கை விடுத்துள்ள அந்த வனத்துறையினர், அங்கிருந்து அனைவரையும் புறப்படச் சொல்லியுள்ளார்.

சோழவந்தானில் கொலை செய்துவிட்டு, 3 மாதங்களாக போலீசுக்கு தண்ணீ: 4 பேர் மீது குண்டாஸ்!

இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளுடன் சேர்ந்து நின்றிருந்த ராமகிருஷ்ணனின் மாமியார், 70 வயது மூதாட்டியை வன அலுவலர் முருகன் கீழே தள்ளிவிட்டார் எனக் கூறப்படுகிறது.

வன அதிகாரி முருகனின் இந்த செயலால் மூதாட்டி பலத்த காயமடைந்து, பெரியகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகி சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணன் வாடிப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள வாடிப்பட்டி போலீசார், வனத்துறை அதிகாரி முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி