ஆப்நகரம்

Madurai Aiims: மதுரை எய்ம்ஸ் தொடர்பாக டெல்லி பயணம்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர்பாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் எனவும் , நீட் விலக்கு தொடர்பாக குடியரசு தலைவரும், உள் துறை அமைச்சகமும் ஒப்புதல் அளிப்பார்கள் என நம்புவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 19 Aug 2022, 5:27 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழக மருத்துவமனைகளில் மருந்து கட்டுப்பாடுகள் இல்லை
  • செப்டம்பர் இறுதிக்குள் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
  • திருமங்கலம் ஹோமியோபதி அரசு கல்லூரியை இடமாற்றம் செய்ய முடிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ma su
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்பு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்; தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி தாழ்வான பகுதியாகி, மழை நீர் தேங்கி கல்லூரி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதன் காரணமாக திருமங்கலம் ஹோமியோபதி அரசுக்கல்லூரியை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்து கேட்கபப்ட்டு திருமங்கலத்திலேயே ஹோமியோபதி கல்லூரி செயல்பட முயற்சி எடுக்கப்படும் என்றார். திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள் 300 பேர் விருதுநகர், திண்டுக்கல் கல்லூரியில் படிப்பதற்கும் தங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லி சென்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டி முடிக்கவும், தென்காசி, ராணிப்பேட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகளை கட்டவும், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர்பாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

மாத்திரை அட்டையின் வடிவத்தில் திருமண அழைப்பிதழ்; வேற லெவல் யோசனை- வைரல் இன்விடேஷன்!

மேலும் தமிழகத்தில் எந்த அரசு மருத்துவமனைகளிலும் மருத்து தட்டுப்பாடு இல்லை என்றும் மருந்து தட்டுப்பாடு என்பது திடீரென உருவாக்கப்பட்ட கற்பனை கதை எனவும் வரும் செப்டம்பர் இறுதிக்குள் மருத்துவ துறையில் இருக்கும் காலி பணி நிரப்படும் எனவும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் வரும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கி இருப்பதால் எந்த பாதிப்பு தமிழகத்திற்கு இருக்காது என்றும் வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் இது வரை 85 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாகவும் நீட் விலக்கு தொடர்பாக குடியரசு தலைவரும், உள் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிப்பார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி