ஆப்நகரம்

கிராம சபைக் கூட்டத்தை என்ன பண்ணலாம் மாநில அரசிடம் பதில் கேட்கும் ஐகோர்ட்!

கிராம சபைக் கூட்டங்களை நடக்கவிடாமல் தடுத்து வந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்துள்ளது...

Samayam Tamil 2 Nov 2020, 6:52 pm
கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil கிராம சபைக் கூட்டத்தை என்ன பண்ணலாம் மாநில அரசிடம் பதில் கேட்கும் ஐகோர்ட்!
கிராம சபைக் கூட்டத்தை என்ன பண்ணலாம் மாநில அரசிடம் பதில் கேட்கும் ஐகோர்ட்!


மதுரையைச் சேர்ந்த அருண் அய்யனார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்த ஆண்டு நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் கிராம சபைக் கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தக் கூட்டங்களில் பல்வேறு வளர்ச்சி சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அவ்வளவு முக்கியமான கிராம சபைக் கூட்டத்தை கொரோனா பரவலையும், சமூக இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க மாட்டார் எனக்கூறி ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

லஞ்சம் வாங்கினால் தூக்கில் போடணும்: ஐகோர்ட் ஆவேசம்!

இதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், கிராம சபைக் கூட்டம் நடத்த வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். இந்த மனுவைத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறபித்தது.

அதன்படி, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, கிராம சபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு கிராம சபைக் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளது என்ற சூழல் உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி