ஆப்நகரம்

நடுரோட்டில் சர்க்கஸ் காட்டிய லோடு லாரி... போக்குவரத்து பாதிப்பு

இதில் ​லாரியின் பின் பக்கம் திடீரென சரிந்த முன்பக்கம் அந்தரத்தில் தூக்கி நின்றுள்ளது. அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அந்தரத்தில் தொங்கிய ஓட்டுநரை மீட்டனர்

Samayam Tamil 21 Nov 2020, 9:36 am
மதுரையில் மணல் ஏற்றி வந்த லாரி அதிக பாரம் காரணமாக அந்தரத்தில் தூக்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil அந்தரத்தில் தூக்கிய லாரி


மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வைகை ஆற்றின் இரண்டு கரைகளையும் அழகுபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் 50க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மாலை அதிகளவு பாரத்தை ஏற்றி வந்த லாரி ஒன்று மதுரை சிம்மக்கல் அம்மா பாலம் அருகே வந்தபோது சரிந்தது.

2 வீரர்களை இழந்த துறை கடை, கடையாக ஏறி இறங்கி ஆய்வு: “ஆயிரம் கடைகள் விதிமீறல்”

இதில் லாரியின் பின் பக்கம் திடீரென சரிந்த முன்பக்கம் அந்தரத்தில் தூக்கி நின்றுள்ளது. அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அந்தரத்தில் தொங்கிய ஓட்டுநரை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்து வாகன ஓட்டிகளை மாற்றுப்பாதையில் அனுப்பிவைத்தனர்.



பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி இருந்த மணல் அனைத்து முழுமையாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தபட்டது. மேலும் லாரி வந்தபோது அருகே வேறு எந்த வாகனம் வராததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இது போன்ற அதிக பாரம் ஏற்றி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி