ஆப்நகரம்

மகன் திருமண சர்ச்சை; இபிஎஸ் விமர்சனத்திற்கு லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மூர்த்தி!

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்காக எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார். முதல்வர் பதவி பெற என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும். பத்திரப்பதிவு துறையில் கடந்த 16 மாதங்களில் 100 மடங்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு வனிகவரித்துறையில் ஆய்வு நடத்தியதுண்டா? அதிமுக ஆட்சியில் இரு துறைகளிலும் கவனம் செலுத்தவில்லை, வருவாய் ஈட்டவில்லை. அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் மூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 30 Sep 2022, 4:19 pm

ஹைலைட்ஸ்:

  • அமைச்சர் மூர்த்தி மகன் திருமணத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
  • 50 ஆயிரம் பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உணவு கொடுத்துள்ளேன்
  • துண்டு பேப்பரில் எழுதி கொடுப்பதை பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி
நேற்று மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். அவர் பேசியதாவது; தமுக்கம், பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள்?
தற்பொழுது நடைபெறுவதுதான் சமூக நீதி திராவிட மாடல் ஆட்சி. நாகரீகமான முறையில் அரசியல் செய்ய வேண்டும். தனது மகன் திருமணம் ஆடம்பரமாக நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு; தனது மகன் திருமணத்தில் ஏழை, எளிய மக்கள் ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் சமமாக அமர வைத்து சாப்பாடு கொடுத்தேன்.

50 ஆயிரம் பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உணவு கொடுத்துள்ளேன். 30 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி, கணக்கர் வேலை பார்த்தாரா என கேள்வி எழுப்பினார். தனது மகன் திருமணத்திற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன்.


கரும்பு வாழை கட்டியது ஆடம்பரமா? திருமணத்திற்கு சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் திருமண செலவு குறித்து ஆய்வு நடத்தி கொள்ளலாம். அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் உள்ளபோது திருமணத்தை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்காக எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார். முதல்வர் பதவி பெற என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும்.
பத்திரப்பதிவு துறையில் கடந்த 16 மாதங்களில் 100 மடங்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு வனிகவரித்துறையில் ஆய்வு நடத்தியதுண்டா? அதிமுக ஆட்சியில் இரு துறைகளிலும் கவனம் செலுத்தவில்லை, வருவாய் ஈட்டவில்லை. அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வர் நிகழ்சியில் முதல் வரிசையில் சர்ச்சை எம்எல்ஏ.. இவரையா போலீஸ் தேடுது?

பத்திரப்பதிவு வணிகவரித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேரில் விவாதம் செய்ய தயார். எடப்பாடி பழனிச்சாமி 10 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது எத்தனை லட்சம் கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி இதை இல்லை என மறுக்க முடியுமா? அதிகாரிகளை லஞ்சம் வாங்க பயன்படுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராகும் முன்பு என்ன தொழில் செய்து கொண்டிருந்தார். பொதுச்செயலாளர் பதவியை பெற எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தார். அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது என்பது எங்களுக்கு தெரியும்.

முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும், அதை விடுத்துவிட்டு மிகப்பெரிய பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வாய்க்கு வந்தபடி பேச கூடாது.
அவருடைய தகுதிக்கு ஏற்ப பொறுப்புடன் பேச வேண்டும், ஆதாரப்பூர்வமாக பேச வேண்டும்.
16 மாதங்களில் அனைத்து துறைகளிலும் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.


அதிமுக ஆட்சியில் வைத்து சென்ற 6 லட்சம் கோடி கடனை சமாளித்து, 20 மணி நேரம் உழைத்து கொண்டிருக்கும் முதல்வர், இந்தியாவின் முன்னோடியாக இருக்கிறார். அவரை பார்த்து பொம்மை முதல்வர் என கூறுவதா? முதல்வரை பேச யாருக்கும் தகுதி கிடையாது.

துண்டு பேப்பரில் எழுதி கொடுப்பதை பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு ஆலோசனை வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செய்துள்ளோம் என்பதை பட்டியலிட தயராக உள்ளோம் என கூறினார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி