ஆப்நகரம்

மதுரை கலெக்டர் மீது MP புகார்... அப்படி என்ன செய்தார்?

மதுரை மாவட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதிக்கு கூட தராமல் 95சதவித நிதியை உதயகுமார் தனது தொகுதிக்கு எடுத்துசென்றுவிட்டார். ​​

Samayam Tamil 23 Jan 2021, 9:20 pm
Samayam Tamil su.venkatesan
மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி நாடாளுமன்ற பேரவை தலைவரிடம் உரிமைமீறல் புகார் அளிக்கவுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி அளித்துள்ளார்.

மத்திய அரசின் பணிகள் குறித்த ஆய்வுமேற்கொள்வதற்காக 6மாதத்திற்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தலைவராக கொண்ட மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்த வேண்டும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டத்திற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு இன்று நடைபெறுவதாக இருந்தநிலையில் திடிரென மாவட்ட ஆட்சியர் தரப்பில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சு.வெங்கடேசன், மற்றும் இணை தலைவருமான மாணிக்தாகூர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

அன்பான போலீஸ், பணியின்போது மாரடைப்பால் மரணம்: மதுரையே சோகம்!

மத்திய அரசின் உத்தரவை மீறி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தது அதிகாரதுஷ்பிரயோகம் எனவும், மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி நாடாளுமன்ற பேரவை தலைவரிடம் உரிமைமீறல் புகார் அளிக்கவுள்ளோம் எனவும், மதுரை மாவட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதிக்கு கூட தராமல் 95சதவித நிதியை உதயகுமார் தனது தொகுதிக்கு எடுத்துசென்றுவிட்டார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதியின் நலனுக்காகவும் தான் கூட்டத்தை நடத்த கோரினோம். மதுரை மாவட்ட ஆட்சியர் ஆளும் தரப்பினர் அழுத்தத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணி செய்யவிடாமல் தடுக்கிறார் எனவும், மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் தேர்வுசெய்யப்படும் முறைகேடு நடைபெறுகிறது.

மதுரையில் ஜல்சக்தி திட்டம் தொடங்கி மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் நடந்துள்ள முறைகேடுகள் வெளிவந்துவிடும் என்பதால் ஆளும்கட்சியினரின் அழுத்தத்தால் வளர்ச்சி திட்ட கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார் என்றார்.

இதனிடையே பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் பேசுகையில் : மத்திய அரசின் திட்டங்களுக்காக பயனாளிகளை முறைகேடாக தேர்வு செய்பவர்கள் மீதும் மத்திய அரசின் திட்டங்களில் பயன்பெறும் உறுப்பினர்களை கட்சிகளில் இணைக்க முயற்சிக்கும் நபர்கள் மீது சட்டப்படியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடத்தப்படும் நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டுமே கூட்டம் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

அடுத்த செய்தி