ஆப்நகரம்

மதுரை: மாதச் சம்பளத்தில் மாஸ்க் வாங்கி பயணிகளைக் காப்பாற்றும் நடத்துநர்...

மாதச் சம்பளத்தில் பயணிகளுக்கு மாஸ்க் வாங்கிக் கொடுத்து வருகிறார் நடத்துநர் கருப்பசாமி.

Samayam Tamil 5 Jun 2020, 12:11 pm
மதுரை மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு இந்த டி.என்.எஸ்.டி.சி பஸ்ஸில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயணம் செய்வது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், இந்தப் பயணத்தின் நடத்துநராக திரு கருப்பசாமி இருக்கிறார். தனது பயணிகளுக்கு பாதுகாப்பு முகமூடிகள் வாங்குவதற்காக ஒரு மாத சம்பளத்தில் ரூ..20,000 செலவிட்ட நடத்துனர் இவர்.
Samayam Tamil madurai tnstc conductor bought masks for passengers from salary
மதுரை: மாதச் சம்பளத்தில் மாஸ்க் வாங்கி பயணிகளைக் காப்பாற்றும் நடத்துநர்...


எப்படித் தொடங்கியது இந்த எண்ணம்?
சில நாட்களுக்கு முன்பு சந்தித்த ஒரு மூதாட்டிதான் இதற்குக் காரணமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் பயணம் செய்த அவர், கொரோனா பேரிடர் குறித்து துளிகூட அறிந்திருக்கவில்லை.
இதன்பிறகு, தனது குடும்பத்தினருடன் கலந்துரையாடி, தன் மே மாத சம்பளம் ரூ .27,000 செலவழித்து 2,000 முகமூடிகள் மற்றும் ஐந்து பாதுகாப்புக் கருவிகள் அடங்கிய தொகுப்புகளை வாங்கியுள்ளார்.

“நான் இதைப் பற்றி என் மனைவியிடம் சொன்னபோது, அவர் யோசிக்காமல் ஒப்புக்கொண்டாளர். நாங்கள் சிரமப்படுகிறோம் என்றாலும், ஒரு மாத சம்பளம் இல்லாமல் குடும்பச்செலவுகளை நிர்வகிப்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்” என்கிறார் கருப்பசாமி.

கருப்பசாமி தனது குழந்தைகளின் கல்விக்காக ரூ .10,000 செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், கட்டணத்தை செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்கக்கோரி ஆசிரியர்களிடம் பேசிக்கொள்கிறோம் என்று மேலும் தைரியமூட்டியுள்ளார் அவரது மனைவி.
கடந்த 12 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி வருகிறார் கருப்பசாமி. பொது முடக்கத்துக்கு முன்பு கேரள பாதையில் பணியாற்றி வந்தார். இந்த திட்டம் குறித்துக் கேட்டபோது, “ என் பேருந்தில் சுமார் 40% பயணிகள் முகமூடி அணியவில்லை. அவற்றில் ஒன்று தொற்றினால் மற்றொன்றுக்கு வைரஸ் எளிதில் பரவுகிறது. இதனால் எனது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நினைத்தேன், முகமூடிகளை வாங்க முடிவு செய்தேன்”

மேலும் சில பயணிகள் நடத்துநரிடமிருந்து தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால், எனக்காக PPE பிபிஇ கருவிகளை வாங்கினேன், ”என்றும் கூறுகிறார்.

போடிநாயக்கனூரில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் இருந்து முகமூடிகளை வாங்கியுள்லார் கருப்பசாமி. மருத்துவக் கடைகளில் முகமூடிகள் ரூ .20 க்கு விற்கப்பட்டாலும், அவர் உற்பத்தியாளரை சமாதானப்படுத்தி ரூ .13 க்கு வாங்கியுள்ளார்.

தற்போது பயணிகளை கட்டாயமாக முகமூடி அணியுமாறு அவர் வற்புறுத்துகிறார், அவர்களிடம் இல்லையென்றால், அவர் மகிழ்ச்சியுடன் ஒன்றைக் கொடுக்கிறார்.

அரசு சொல்லிவிட்டது. மற்றபடி எனக்கென்ன என்று கடக்காமல், குடும்பச் செலவுகளைச் சமரசம் செய்துகொண்டு தன் மாதச் சம்பளத்தில் மாஸ்க் வாங்கிக் கொடுக்கும் இந்த நடத்துநரின் நல்லெண்ணத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி