ஆப்நகரம்

வாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்!

கொரோனா கஷ்டம் காரணமாக வீட்டு வாடகை தராத நிலையில், அதன் உரிமையாளர் ஆத்திரத்தில் வீட்டை இடித்தார். வீட்டு உரிமையாளரின் இந்தச் செயலின்போது வீட்டினுளிருந்த சிறுவன் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

Samayam Tamil 29 Nov 2020, 9:56 am
மதுரை மண்மலைமேடு பர்மா காலனி பகுதியில் பாரதி - விஜயலட்சுமி தம்பதியினர் மகன், மற்றும் மகளுடன் 10ஆண்டுகளாக சபரிராயன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
Samayam Tamil வாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்!
வாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்!


இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பணிக்குச் செல்லாத பாரதி-விஜயலட்சுமி தம்பதியினர் நோய் வாயால் அவதிப்பட்டனர்.

இதன் காரணமாக பாரதிராஜா கடந்த 5 மாதங்களாக வாடகை செலுத்த முடியாத நிலை இருந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் வீட்டு வாடகை வழங்கப்படாதது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

இந்த சூழலில் குறிப்பிட்ட வீட்டிற்கு சில நபர்களைக் கூட்டிக் கொண்டு நேரில் சென்ற உரிமையாளர் சபரிராயன் வீட்டை இடித்துத் தள்ளினார்.

பகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை!

அப்போது வீட்டிலிருந்த பாரதி-விஜயலட்சுமி மகன் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் சபரிராயனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி