ஆப்நகரம்

மதுரையில் ஒன்று கூடிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்...

மதுரை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்ட மருது சகோதரர்களின் 220 ஆவது குருபூசை விழாவை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Samayam Tamil 25 Oct 2021, 2:54 pm
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801 ஆம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் மூன்று தினங்கள் கழித்து மருது சகோதரர்களின் உடல் அவர்களே கட்டி வைத்த காளையார் கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
Samayam Tamil ராமநாதபுரத்தில் குவிந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்...


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூசை விழாவை அரசு விழாவாக தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது.

இந்த நிலையில் மாமன்னர் மருது சகோதரர்களின் 220 ஆவது குருபூசை விழாவை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுசகோதரர்கள் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஒரு கோடி ரூபாய் கடத்தல் அட்டைகள் இலங்கை புறப்பாடுக்கு ரெடியாக இருந்த நேரத்தில் சிக்கியது!
குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதற்கிடையே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அப்போது கொண்டாட்டத்திற்காக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் ராமநாதபுரம் அமைச்சரே நேரில் வரவில்லை. இந்த நேரத்தில் சமூக ஆர்வலர்கள் அதை குறிப்பிடுகின்றனர்.

அடுத்த செய்தி