ஆப்நகரம்

மாட்டை திருடி இறைச்சியாக்க முயன்றவருக்கு மதுரை பஞ்சாயத்தில் என்ன தண்டனை தெரியுமா?

மதுரை அருகே கன்று குட்டியை திருடியதாக ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Jun 2021, 12:00 am
மதுரை அருகே உள்ள மேலபனங்காடி சீதாலட்சுமி நகரைச் சேர்ந்த பாண்டி மகன் கண்ணன். இவர் நேற்று முன்தினம் இவர் வீட்டின் அருகே வந்த ஒரு கன்றுக்குட்டியை கோசாகுளம் பகுதியிலுள்ள ஒரு இறைச்சி கடையில விற்று விட்டதாக தெரிய வந்துள்ளது.
Samayam Tamil மாட்டை திருடி இறைச்சியாக்க முயன்றவருக்கு மதுரை பஞ்சாயத்தில் என்ன தண்டனை தெரியுமா?


இதையடுத்து மேலபனங்காடி சேர்ந்த நாகலட்சுமி என்பவர் கோசாகுளம் அருகே வரும்போது தனது கன்றுக்குட்டி இறைச்சிக் கடையில் கட்டி போட்டு இருப்பதை பார்த்து கடைக்காரரிடம் கேள்வி எழுப்பினார். கன்றுகுட்டி எப்படி வந்தது என விசாரணை செய்தபோது மேலபனங்காடி ஊரைச் சேர்ந்த பாண்டி மகன் கண்ணன் என்பவர்தான் இங்கு விற்பனைக்கு கொண்டு வந்தார் என கூறியுள்ளார்.

உடனே நாகலட்சுமி கண்ணன் வீட்டிற்கு சென்று தனது கன்று குட்டியை திருடி விற்றுள்ளாதாக தகராறு செய்துள்ளார். பாண்டியும் அவரது மகன் கண்ணனும் கன்றுக்குட்டியை திரும்ப அழைத்து கொண்டு நாகலட்சுமியிடம் ஒப்படைக்க சென்றபோது ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழுந்து வைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊர் கூடி முடிவெடுத்துள்ளது. இதையடுத்து அவர் காலில் விழுந்துள்ளார். அப்போது பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி