ஆப்நகரம்

அழகிரியின் ‌பிறந்தநாளை கொண்டாட தயாராகும் திமுக? மதுரையில் ‌களைகட்டபோகும் திருவிழா!

மதுரையில் மு.க.அழகிரிக்கு என்று தனிக் கூட்டம் உள்ளதாக, அவ்வப்போது அழகிரி ஆதரவாளர்கள் அடையாளம் காட்டி வருகிறார்கள்.

Samayam Tamil 30 Jan 2022, 10:39 pm

ஹைலைட்ஸ்:

  • மதுரையில் மு.க.அழகிரிக்கு என தனிக்கூட்டம்
  • ஜனவரி 30 ல் பிறந்தநாள்
  • பிறந்தநாளை கொண்டாடும் ஆதரவாளர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கலைஞர் மகன் மு.க. அழகிரியின் பிறந்தநாள் விழா, இன்று ( ஜனவரி 30 ஆம் தேதி) மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது.
பத்து வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அழகிரியின் பிறந்தநாள் விழா என்றாலே மதுரையின் பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்சமயம் இரண்டு வருடங்களாக, அரசியலில் அமைதி காத்து வரும் அழகிரியின் பிறந்த தின விழாவை அவரது ஆதரவாளர்கள் இந்த வருடம் சிறப்பாக கொண்டாடினர்.


மதுரை மாநகர் முழுமைக்கும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இலவச வேட்டி சேலை, கல்வி உதவிகள் என வழங்கினார்கள். அதன் ஒரு நிகழ்வாக, மதுரை ஜீவா நகர் பகுதியில் முக அழகிரி பேரவை சார்பில் முருகன் மற்றும் பரமசிவம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மதுரை முனிச்சாலை பகுதியில் அழகிரியின் ஆதரவாளர் சேட் (எ) முகமது உசேன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்களை வழங்கி அழகிரியின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

கருவுற்ற பெண்களுக்கு பேங்க் வேலை இல்லை... எஸ்.பி.ஐ செயலுக்கு கொந்தளித்த எம்.பி!

இந்த விழாவில், அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் எம்.எல்.ராஜ், முபாரக் மந்திரி, கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களையும் இனிப்புகளையும் வழங்கினார்கள்.

அடுத்த செய்தி