ஆப்நகரம்

மழைக் காலத்தில் குழி தோண்டும் அரசு: இதுதான் ஸ்மார்ட் சிட்டியா?

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள் 90 சதவீதம் தோண்டப்பட்டுள்ளன. சாக்கடை, தண்ணீர் குழாய் பஞ்சமில்லை. ஆனால் இப்போது தோண்டும் பணிகள் அனைத்தையுமே அரசுதான் நிகழ்த்துகிறது.

Samayam Tamil 7 Jan 2021, 6:49 pm
இப்படி வெவ்வேறு காரணங்களைச் சொல்லித் தோண்டப்பட்டுள்ள குழிகள் காரணமாக மாவட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்களால் இந்த சாலைகளில் பயணிக்கவே முடியவில்லை.
Samayam Tamil most of the roads in the district are damaged due to smart city project started during rainy season
மழைக் காலத்தில் குழி தோண்டும் அரசு: இதுதான் ஸ்மார்ட் சிட்டியா?



காரணம் ஏராளம், ஆனால் அடிப்படை என்ன?

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கி, பாதாளச் சாக்கடையைச் சீரமைக்கும் பணிகள் என அனைத்துமே மழைக் காலம் தொடங்கிய பின்னர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எதனால் இந்த மழைக் காலத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

குடிநீர் விநியோகத்திற்கு என சொல்லப்படுகிறது!

ஆம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துத்தான் இப்படி ஒரு வேட்டை நடந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முல்லை பெரியார் அணையிலிருந்து நீர் மதுரைக்குக் கொண்டு வந்து விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக பைப்கள் பதிக்கும் பணிதான் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

இவைதான் அரசின் திறன் என விமர்சனம்..!

இதற்கிடையே பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை அடைத்து அது வெளியே கசிந்து ரோடு மொத்தமும் நாறிப் போகும் நிலைதான் மதுரையில் நீடித்து வருகிறது. கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக மதுரை மாவட்டத்தில் சரியான திட்டமிடலே இல்லை. ஆம் இதே கருத்தை மாநகராட்சி மூத்த பொறியாளர்களே வெளிப்படையாகக் கூறி வருகிறார்கள்.

கொந்தளிக்கும் மக்கள்: அதிகாரிகளிடம் பதில் இல்லை!

இவையெல்லாம் சரி, மக்களுக்கான பணி அதற்காகச் சாலைகளில் குழிகள் தோண்டத்தான் வேண்டும். ஆனால் அதை எப்படித் தோண்ட வேண்டும் என்பது படித்த அனைவருக்குமே தெரியும் என மாவட்ட மக்கள் கொந்தளிக்கின்றனர்.

என்ன பிடிவாதம் அரசே?

அதாவது நம் நாட்டில் ஒரு வருடத்திற்கு 4 காலப் பருவம் உள்ளது. இதில் மழைக் காலத்தில்தான் இந்த குழிகளை வேகமாகத் தோண்ட வேண்டும் என எதற்காக அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

குழிகளால் அச்சத்துடன் வாழும் பொது மக்கள்!

அதேபோல் மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த பணிகளின்போது பல வீடுகளின் பாதாளச் சாக்கடை இணைப்புகள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் கீழ் பணிபுரிபவர்கள் செய்யும் இந்த உடைப்பு போன்ற சம்பவங்களால் யாரைக் கேள்வி கேட்க வேண்டும் என்பது புரியவில்லை. மொத்தத்தில் இப்போதைய நேரத்தில் இந்த குழிதோண்டும் பணிகள் காரணமாக மதுரை மக்கள் வாழ முடியாத நகரமாக மாறிவிட்டது.

அடுத்த செய்தி