ஆப்நகரம்

கீழடி மாவீரன் கல்லறையில் முதுமக்கள் தாழியுடன் கிடைத்த அதிசயம்!

ஈமகாடு பகுதியில் ஆண் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகே ஒரு மர கைப்பிடியுடன் வாள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Aug 2021, 2:47 pm
மதுரை மாவட்டம் அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளைக் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை துவங்கியது. இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil கீழடி மாவீரன் கல்லறையில் முதுமக்கள் தாழியுடன் கிடைத்த அதிசயம்!


இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில், “கீழடி அகழாய்வின் தொடர்ச்சியில் கொந்தகை மட்டுமே மிகவும் பழமையான ஈமக்காடு. இங்கு மனிதர்கள் புதைக்கப்படும்போது ஒவ்வொரு நபர்களுக்கு வெவ்வேறு முறையில் புதைக்கப்பட்டுள்ளனர்.

தாழியை அருகே வைத்துக் கூட புதைத்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் உடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஒரு மர கைப்பிடியுடன் வாள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப் புதைக்கப்பட்டிருப்பதால் அவர் ஒரு மாவீரனாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறோம். அவரின் பெருமை சொல்ல அவ்வாறு புதைக்கப்பட்டுள்ளார்.
மதுரை: 30 அடி ஆழத்தில் குட்டியுடன் விழுந்த கரடி, 12 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி!
மரக்கைப்பிடி 6 செமீ நீளமும், வாள் 40 செமீ நீளமும் இருந்துள்ளது. அந்த முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள், சுடுமண் பாத்திரங்கள் இருந்தன. இந்த வாளை ஆய்வு செய்ய அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிகல் ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் தொல்லியல் துறையினர் தகவலை ஆவணப்படுத்தும்போதுதான் முழு தகவல் வெளிவரும்” எனக் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி