ஆப்நகரம்

வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தரும் மதுரை இறைச்சி கடை!

கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்றி 500 ரூபாய்க்கு மீன் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என இறைச்சிக் கடை ஒன்று மதுரையில் விற்பனையை நடத்தி வருகிறது.

Samayam Tamil 1 Aug 2021, 8:02 pm
ஆடி மாதம் என்றாலே இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் உள்ளது.
Samayam Tamil வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தரும் மதுரை இறைச்சி கடை!


இதனையடுத்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஜவுளிக்கடைகள் அறிவிக்கும் ஆடி சலுகை போல் மதுரையில் இறைச்சிக்கடை ஒன்று அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

மதுரை பீபீகுளம் பகுதியில் உள்ள மீன் இறைச்சிக் கடையில் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களைக் கவர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முக கவசம் அணிந்து வந்து உரியத் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து 500 ரூபாய்க்கு மேல் மீன் இறைச்சி வாங்கினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ஒரு நாள் வழங்கப்பட்டது.

மதுரை கோயில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிப்பு: கொரோனா தீவிரம்தான் காரணம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த ஆஃபரை அறிவித்துள்ளதாகக் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்லூர் பகுதியில் பிரியாணி கடையில் 5 பைசாவிற்கு விற்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இந்த சூழலில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலை வைத்து இறைச்சிக் கடை வெளியிட்டுள்ள அறிவிப்பு மாவட்டத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி