ஆப்நகரம்

உள் ஒதுக்கீட்டுல டாக்டர் சேர்ந்தவங்க ஹவ் மெனி? ஐகோர்ட் கேள்வி

கடந்த 3 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்த விவரத்தைக் கூடுதல் மனுவாகத் தாக்கல் செய்ய மனுதாரருக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறபித்துள்ளது.

Samayam Tamil 9 Nov 2020, 8:21 pm
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீட்டை வழங்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
Samayam Tamil உள் ஒதுக்கீட்டுல டாக்டர் சேர்ந்தவங்க ஹவ் மெனி? ஐகோர்ட் கேள்வி
உள் ஒதுக்கீட்டுல டாக்டர் சேர்ந்தவங்க ஹவ் மெனி? ஐகோர்ட் கேள்வி


நெல்லையை சேர்ந்த ப்ரீத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு ஆளுநர், ஒன்றரை மாதம் கழித்து ஒப்புதல் அளித்தார். இதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைப்பது உறுதி ஆகியுள்ளது. இந்த சூழலில், அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அரசுப் பள்ளி இல்லாத பல இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் இருக்கின்றன. குறிப்பிட்ட பள்ளிகளிலும் ஏராளமான ஏழை மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கும் அரசு உள் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

சூப்பர்ப்பா... தமிழ்நாடு நம்பர் ஒன்னு, மதுரை நம்பர் 2!

இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “அரசுப் பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பெரிதாக வேறுபாடுகள் எதுவுமில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா புத்தகம், கட்டணமில்லா லேப்டாப், கட்டணமில்லா நீட் பயிற்சி உட்பட அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த சூழலில், உள் ஒதுக்கீடு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை? எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “கடந்த 3 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்?” எனக் கேள்வி எழுப்பினர். குறிப்பிட்ட விவரங்களைக் கோரி, மனுதாரர் கூடுதல் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி