ஆப்நகரம்

பள்ளி திறப்பு ஒருபக்கம் இருக்கட்டும்: ஐகோர்ட்ல இருக்க இந்த வழக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், குழந்தைகளுக்கான உதவி எண், காவல்துறை உதவி எண் போன்ற விவரங்களைப் பாடப்புத்தகத்தில் சேர்க்கக் கோரி வழக்கு.

Samayam Tamil 17 Sep 2021, 5:39 pm
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறபித்துள்ளார்.
Samayam Tamil பள்ளி திறப்பு ஒருபக்கம் இருக்கட்டும்: ஐகோர்ட்ல இருக்க இந்த வழக்கு தெரியுமா?


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்:
கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதற்குப் போதுமான சட்ட அறிவு குறித்த விழிப்புணர்வு இன்மையே காரணம். ஆகவே குழந்தைகளின் சட்ட உரிமை குறித்து பள்ளிப் பருவத்திலிருந்தே கற்பிக்க வேண்டியது கடமையாக உள்ளது.

கேரள அரசின் பாடப்புத்தகத்தில் பள்ளிக் குழந்தைகள் உரிமை என்ற தலைப்பில் வாழ்வுரிமை உள்ளிட்டவை குறித்து விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதோடு குற்றத்தடுப்பு எண், இலவச உதவி எண், கேரள காவல்துறையினரின் உதவி எண் ஆகியவையும் அச்சிடப்பட்டுள்ளன.

கொரோனாவில் குழந்தை சேல்ஸ்; ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம்!
அதேபோல் தமிழ்நாட்டில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், குழந்தைகளுக்கான உதவி எண், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் விதிகள், காவல்துறை உதவி எண் போன்ற விவரங்களைப் பாடப்புத்தகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த மனு தொடர்பாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதிலளிக்க வேண்டும்” உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி