ஆப்நகரம்

இந்திய அளவில் முதல் முறை.. மதுரை அரசு மருத்துவமனைக்கு குவியும் பாராட்டு!

தேசிய அளவில் முதன்முறையாக எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Samayam Tamil 6 Aug 2022, 7:42 am
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் செலவில் எலும்பு வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil Madurai gh Bone Bank


இந்த எலும்பு வங்கி மூலம் தானம் செய்யும் மனிதர்களின் எலும்புகள் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டு, கிருமிநீக்கம் செய்யப்படுகிறது. இந்த முறையில் சேகரிக்கப்படும் எலும்பு, ஜவ்வுகளை ஐந்து ஆண்டுகள் வரை மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை எலும்பு வங்கி மூலம் இதுவரை ஏழு நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். அதில் மூன்று பேருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் முழங்கால் பகுதியில் தசைநார் கிழிதல் பிரச்சனை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

எலும்பு உடைந்து அவதியடைந்த 4 பேர், முதுகு பகுதி கோணல் வியாதியால் அவதியடைந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் பயனடைந்துள்ளனர். தேசிய அளவில் அரசு மருத்துவமனைகளின் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல்முறை என அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி